இலங்கையில் கோவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தொடர்ந்தும் விமானப்படை பங்களிப்பு.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின்கீழ்  விமானப்படை  சுகாதார சேவைகள் பணிப்பகம் மற்றும் தரைவழி செயற்பாட்டு பனிப்பக்கமும் இணைந்து  அரசாங்கத்தின்  கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிர பங்களிப்பை  அளிக்கிறது. இதன்முகமாக  வெளிசர வைத்தியசாலையின்  இல 11 , 12 ம் வாட்  கட்.டிட தொகுதியை  புனர்நிமானம் செய்வதற்கான  பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை  விமானப்படையின்  சுகாதார மற்றும் தரைவழி செயற்பாட்டு  பணிப்பளர்கள் இருவரும்  கடந்த2020 மார்ச் 21 ம் திகதி  பார்வையிட்டனர்.

கட்டுநாயக்க விமானப்படையின் சிவில்  பொறியியல் பிரிவின் அதிகாரிகள் 05 பேரும்  75 படைவீரக்ளும் இந்த வேலைத்திட்டத்தில்  பங்கேற்றனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.