இலங்கை விமானப்படையின் கண் மருத்துவ முகாம்இலங்கை

விமானப்படையின் பொதுத்துறைப்பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாமொன்று 2011செப்டம்பர் 21ம் திகதியன்று விமானப்படை கடுநாயக்க முகாமில் இடம்பெற்றது.

மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரமவின்ஆலோசனைக்கு அமைய கடுநாயக்க முகாமில் பணியாளர் தொகுதிக் கண்காணிப்பாளராகிய திருமதி. BV மல்லிகாவின்வேண்டுகோளுக்கு இணங்க இந்நிகழ்ச்சியானது முற்றாக இலவசமாக இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளால்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுத்துறைப்பணியாளர்கள் பங்குபற்றியதுடன் இது இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இந்நிகழ்வுக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம மற்றும் கடுநாயக்க விமானப்படை மருத்துவமனையின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" LR ஜயவீர, கண் மருத்துவ அதிகாரி சுஜாதா பதிரன,  விமானப்படை சேவா வனிதா பிரிவின் உதவி செயலாளராகிய "ஸ்கொட்ரன் லீடர்" நதீரா தந்திரிகே, கடுநாயக்க முகாமில் பணியாளர் தொகுதிக் கண்காணிப்பாளராகிய திருமதி. BV மல்லிகா உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.