ஹிங்குராகோட விமானப்படை தளத்தில் புதிய வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.

ஹிங்குராகோட  விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடத்தொகுதி    விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சும்மாங்கா டயஸ் அவர்களினால்  கடந்த 2020 மே 30 ம் திகதி  திறந்துவைக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சை பிரிவு, அவசர மறுவாழ்வு பிரிவு, பிசியோதெரபி பிரிவு, மருத்துவ ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, மருந்தகம், ஒபிடி மற்றும் உள்நோயாளிகளுக்கான வார்டு வசதிகளை உள்ளடக்கிய இந்த மருத்துவமனை ஹிங்குரகொட விமானப்படை தளத்தில் நீண்டகால தேவையாக உள்ளது.

விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார்  அவர்களின் மேற்பார்வையின்கீழ்  120 படைவீர்ரகளினால்  இந்த வேலைதிட்டம் இடம்பெற்றது

இந்த திறப்புவிழா வைபவத்தில் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்   சமரசிங்க  மற்றும் விமானப்படை  சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர  மற்றும் ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் சம்பத் டயஸ் மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொண்டார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.