விமானப்படை இல 05 போர் படைப்பிரிவிற்கு புதிய அலுவலக கட்டிடம் விமானப்படை தளபதியால் திறந்துவைப்பு.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05 போர் படைப்பிரிவிற்கு புதிய அலுவலக கட்டிடம் விமானப்படை தளபதியால்  கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி  திறந்துவைக்கப்பட்டது.

இந்த படைப்பிரிவு 1991 முதல் இன்றுவரை ஒரு கவர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது,  நாட்டின் யுத்த தேவைப்படும் காலங்களிலும், சமாதான காலத்திலும் தேசத்திற்கு 29 ஆண்டுகால அர்ப்பணிப்பு சேவையை வழங்கியுள்ளது.

இப்படைப்பிரிவானது  போர் விமானிகளின்  தொட்டிலாகவும் இன்றுவரை சிறந்துவிளங்குகின்றது என்பது குறிபிடடிகக்கத்து.

இந்த கட்டுமான வேலைகள் கட்டுநாயக்க சிவில்  பொறியியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதுடன்  மேலும்  விமானப்படை  சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேர்பார்வையில்  கட்டுநாயக்க படைத்தள  கட்டளை அதிகாரி  மற்றும் இல 05  படைப்பிரிவின்  கட்டளையா அதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் கட்டுக்குநாயக படைத்தள  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.