விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் பயிற்சியாளர்களுக்காக பயிற்சிநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது .

விமானப்படை  தளபாடங்கள் மற்றும் வளங்கள் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  வீரசிங்க அவர்களின்   வழிகாட்டலின்கீழ்  விமானப்படை  பயிற்ச்சி பிரிவு பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் பாயோ  அவர்களின் மேட்பார்வையின்கீழ்   சிகிரியா விமனப்படை  தளத்தில் அமைந்துள்ள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில்   பயிற்றுவிப்பாளர்களுக்கான  பயிற்ச்சிநெறி  இடம்பெற்றது .

ஒரு மாதகாலம் சரியாய் இடம்பெற்ற இந்த பயிற்சிநெறியானது ஆங்கில மொழியில்  இடம்பெற்றது   இதன்மூலம்  ஆங்கில  அறிவை விருத்திசெய்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது என்பது விசேட அம்சமாகும்

இந்த பயிற்சிநெறியொயில் ஆங்கில வகுப்புக்கள்  ஆங்கில மொழி பயிற்சி அதிகாரியான  ஸ்கொற்றன்  ளீடர் பண்டார அவர்களின்  ஏற்பாட்டின் கீழ் மேலதிக விரிவுரைகள்  குரூப் கேப்டன்  பெர்னாண்டோ  மற்றும் குரூப் கேப்டன்  தசநாயக  , பிலைட்  லேப்ட்டினல்  ராஜபக்ஷ ஆகியோரினால் நேரடியாக நடத்தப்பட்டது   

இந்த பயிற்சிநெறியின் வெளியேற்று வைபவம்  கடந்த 2020  ஆகஸ்ட் 06 ம் திகதி   சிகிரிய  விமானப்படை  தளத்தின்  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது இந்த நிகழ்விற்கு  பிரதம அதிதியாக சிகிரியா  விமானப்படை  தள  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  நாணயக்கார  அவர்கள் கலந்துகொண்டார் மேலும்  ஹிங்குரகோட  விமானப்படை  தள   வளங்கள்  பிரிவின்  பொறுப்பதிகாரி  விங் கமாண்டர்  ரணதேவ  மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொணடனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.