விஷேட பல் வைத்திய முகாம் - பலாலி
இலங்கை விமானப்படை பலாலி முகாமினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட பல்
வைத்தியமுகாமொன்று கடந்த 'உலக சிறுவர் தின' திகதியன்ற வயாவிலன் மத்திய
பாடசாலையில் அதன் கட்டளை அதிகாரி
"குறூப் கெப்டன்" அதுல
கலுஆரச்சி தலைமையில் இடம்பெற்றது.
எனவே இந்நிகழ்வில்
சுகாதாரம் தொடர்பான விஷேட கருத்தரங்குகள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வுக்கு
சுமார் 100க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள் பங்குபற்றியதுடன் இது
இம்முகாமின் ஒரு சமூக சேவையாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
இந்நிகழ்ச்சியானது முற்றாக இலவசமாக இலங்கை
விமானப்படை வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
மேலும் இந்நிகழ்ச்சியானது இலங்கை
விமானப்படை பலாலி முகாமில் பல் வைத்திய அதிகாரி" பிலைட் லெப்டினன்" OWBA
ஜினசேகர அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப
மேற்கொள்ளப்பட்டமை விஷேட
அம்சமாகும்.