தியதலாவை முகாமின் 59வது நிறைவாண்டு விழா
தியதலாவை முகாமின் 59வது நிறைவாண்டு விழா 14.10.2011 திகதியன்று முகாமின்
கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" ஜனக அமரசிங்க தலைமையில் மிக சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்வைபத்தின் நிமித்தம்
தியதலாவை ரயில் நிலையத்தில் ஓர் சிரமதான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதனைத்தொடர்ந்து இதனை
முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி, கரப் பந்தாட்டப்போட்டி மற்றும்
இழுவை வடப்போட்டி என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு கலந்து கொண்ட
அனைவரும் இதில் பங்குபற்றி மகிழ்ந்தமை விஷேட
அம்சமாகும்.
அத்தோடு 15.10.1952ம் திகதியன்று தியதலாவை
விமானப்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், கடந்த 59 வருடங்களாக
தாய்நாட்டிற்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.