இல 02 கனரக வான் போக்குவரத்து படைப்பிரிவிக்கு புதிய கட்டிட தொகுதியொன்று விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு.

கட்டுநாயக்க விமானப்படைதளத்தில் அமைந்துள்ள இல 02  கனரக வான் போக்குவரத்து படைப்பிரிவிக்கு புதிய கட்டிட  தொகுதியொன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளினால் கடந்த 2020 அக்டோபர் 25 ம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

இந்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  இந்த கட்டடத்தொகுதியில் முன்வளங்கள் கலைஞ்சியசாலை மற்றும் அப்படைப்பிரிவுக்கான  சிற்றுண்டிசாலை தொகுதி என்பன உள்ளடங்குகின்றன . நாட்டில் ஏற்பட்டுள்ள  சுகாதார நிலைக்கு ஏற்ப  குறிப்பிட்ட நபர்களின்  பங்களிப்பில்  இந்த திறப்பு விழா வைபவம் இடம்பெற்றது  இதன்போது  கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகாந்த  மற்றும் 02 ம் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி குருப்  கேப்டன்  பிரதீப் பியரத்ன மற்றும் இல 2 படைப்பிரிவின் அதிகாரிகள் படைவீர்ர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்த கட்டிட தொகுதியானது  விமானப்படை சிவில் பொறியியல்பணிப்பாளரின் கண்காணிப்பின்கீழ் கட்டுநாயக்க சிவில் பொறியியல்  படைப்பிரிவினரால்  நிர்மாணிக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.