விமானப்படை தளபதி அவர்கள் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் 18 வது  விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு புனித கண்டி தலதா மாளிகைக்கு வணக்க வழிபாடுகள்  மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கண்டி தியவதன நிலம் திரு. மஹேந்திர ரத்வத்த அவர்களை சந்தித்து கண்டி மஹாவிஷ்ணு  கோவிலுக்கும் விஜயம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து  அஸ்கிரிய  பீடத்தின்  பீடாதிபதி வணக்கத்துக்குரிய  வரகாகோட ஸ்ரீ ஞானரத்ன அவர்களையும்  மல்வத்துபீட பீடத்தின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் அவர்களையம் சந்தித்தார் .

அதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தினருடன்  அவரின் சொந்த ஊரான அம்பிட்டிய தழுக்கொள்ள  ஸ்ரீ புரிவராராம ரஜமஹா விகாரைக்கும்   விஜயம் மேற்கொண்டார்

இந்த விஜயத்தில் விமானப்படை தளபதி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை  பணியாளர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.