விமானப்படையில் முதல் முதலாக 02 பெண் விமானிகள் விமானப்படை அதிகாரிகளாக இணைந்துள்ளனர் அவர்களுக்கான வெளியேற்றுவைபவம் சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில்.

இலங்கை விமானப்படையின் அதிகாரிகளுக்கான  அதிகரிகாரம் வழங்கும்  சிறப்பு வைபவமான  அதிகாரிகள் வெளியேற்று விழா  கடந்த 2020  நவம்பர் 16 ம் திகதி சீனக்குடா  விமானப்படைகல்விப்பீடத்தில்  இடம்பெற்றது  இதில் இல 61 வது  அதிகாரிகள்  பயிற்சிநெறி , இல  13 வது  பெண் அதிகாரிகள்  பயிற்சி பாடநெறி  இல  34 மற்றும் இள 34 வது  கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழக பயிற்ச்சி நெறி  ஆகிய பயிற்சிநெறியை  நிறைவு செய்த அதிகாரிகள்  அதிகாரம் வழங்கி  விமானப்படையின் அதிகாரகரமிக்க அதிகாரிகளாக  இணைத்துக்கொள்ளபட்டனர்.

இந்த  நிகழ்வுக்கு  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  அழைப்பின்பேரில்  பிரதம அதிதியாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  ( ஓய்வுபெற்ற ) அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின் அணிவகுப்புக்கு   சீனக்குடா விமானப்படை தரைப்பயிற்சி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  உதய தி சில்வா அவர்களின்  தலைமையில்  இடம்பெற்றது .இந்த அணிவகுப்பில்  03 அணிகளுடன்   09 ஜனாதிபதி  வாரணம் கொண்ட  கொடிகள்  இணைத்து  இந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பு மரியாதையை நிகழ்வில் 53 அதிகாரிகளுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதுடன் இலங்கை  விமானப்படை  வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள்  விமானியாக  இணைத்துக்கொள்ளப்பட்டனர் .

ஏறக்குறைய  03 ஆண்டுகள் தீவிர பயிற்சியின் பின்பு  பொது விமானி , தொழில்நுட்ப, பொறியியல், மின்னணு பொறியியல், தளவாடங்கள், நிர்வாக ரெஜிமென்ட் மற்றும் வான் செய்றாப்பாடு  ஆகிய பிரிவுகளுக்கு. அவர்கள் தெரிவு செய்யப்பட்டு தங்களது பணிக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வாரங்கள்  தியத்தலாவ  போர்ப்பயிற்சி பாடசாலையிலும்  3 வருடங்கள்   கொத்தலாவ்லா பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும்   பாடநெறியினை பெற்று அதன்பின்பு தொழிசார் பயிற்சியினை  சீனக்குடா  கல்விப்பீடத்திலும்  தியத்தலாவ  போர்பயிற்சிப்பாடசாலையிலும் மேற்கொண்டனர்.  

இன்றய  தின அணிவகுப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் ஜனாதிபதி வாரணம் அடங்கிய ஒரு அணிவகுப்புக்கு முதல்முதலாக  ஒரு பெண் அதிகாரி தலைமைதாங்குவது விசேட அம்சமாகும்  மேலும் இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக  பெண் விமானிய இணைந்து  இலங்கை இராணுவ வரலாற்றில் முதல் முறையாக தங்களது பெயர்களை பதித்துக்கொண்ட  பெண் பைலட் அதிகாரி குணரத்ன பெண் பைலட் அதிகாரி வீரவர்தன ஆகியோர் பதித்துக்கொண்டனர் என்பது விடேச அம்சமாகும்.

மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.