பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் தென் சூடான் குடியரசில் மனிதநேய செயற்ப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படை போக்குவரத்து படைப்பிரிவின் 04 வது படைப்பிரிவினரால் சமுக சேவைத்திட்டம் ஓன்று நடாத்தப்பட்டது

ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ்  தென் சூடான் குடியரசில்  மனிதநேய செயற்ப்பட்டு  பணியில் ஈடுபட்டுள்ள  விமானப்படை   போக்குவரத்து  படைப்பிரிவின் 04 வது  படைப்பிரிவினரால்  விசேட சமூகசேவைத்திடம் ஓன்று கடந்த 2020 நவம்பர் 16  ம் திகதி  தென்சூடானின் அகோபோ  நகரின் சிறுவர் காப்பகத்தில் இடம்பெற்றது  

இந்த சேவை திட்டத்த்திற்கு  ஐக்கியநாடுகள்   பாதுகாப்பு கண்பாக்கணிப்பகம் நிவாரணங்களுக்கான   அனுசரணை வழங்கி இருந்தனர் .இதன்போது  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப்  கேப்டன்  சோனக குலதுங்க  மற்றும் திருமதி தெபோரா ஸ்கேன் (கள அலுவலகத் தலைவர் -  கிழக்கு பிராந்தியம் ) பிரதம அதிதிகளாக  ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் திரு. ஜமுத் யூட் டக்(அகோபோவின் மாவட்ட ஆணையர்) மற்றும் திரு. பீல்டூம் டேட்டோட் (அகோபோவின் மாவட்ட கல்வி அதிகாரி) ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.நிகழ்வின் போது, பள்ளி உபகரணங்கள், எழுதுபொருள் பொருட்கள், ஆடை பொருட்கள் மற்றும் உலர் பொருட்கள் வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.