இலங்கைக்கான சீன தூதரகத்தினால் இலங்கை விமானப்படைக்கு பொதுநன்கொடைகள் வழங்கப்பட்டது

மக்கள் சீன குடியரசின் இலங்கை தூரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர்  சிரேஷ்ட கேர்ணல்  வான் டோங்  அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 18ம்  திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்திற்கு வருகைதந்து சந்தித்தார்.

இதன்போது மேலும் அவருடன் தூரகத்தின் துணைப்பாதுகாப்பு  இணைப்பாளர் கேர்ணல் சாங் கியாஜின்  மற்றும் பிரதிப்பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் வூ ஷாஹோங் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

இதன்போது  இருசாராருக்குமிடையிலான  கலந்துரையாலின்பின்பு  சீன தூதுவர்களால்  இலங்கை விமானப்படைக்கு  10 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொவிட் 19  ஆண்டிஜன் பரிசோதனைக்கருவிகள்  வழங்கிவைக்கப்பட்டது இதன்போது வழங்கப்பட்ட  8725   கருவிகள் அனைத்தும் குவான்புற  விமானப்படை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன்போது இறுதியில் வருகை தந்தவர்களுக்கிடையிலான  நினைவுசின்னம்கள்    பரிமாறப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.