இலங்கை விமானப்படையினால் அனுராதபுரத்தில் கெப்பித்திகொல்லாவா கனுகஹாவெவ கிராமத்தை புதுப்பித்தல் வேலைத்திட்டம்


''கமசமக பிலிசந்தர '' எனும்  அதிமேதகு ஜனாதிபதி  அவர்களின் வேலைத்திட்டத்தின்கீழ் கடந்த 2020  டிசம்பர் 30ம்  திகதி  அனுராதபுரத்தில்  கெப்பித்திகொல்லாவா  கனுகஹாவெவ கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்   அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம்  மக்கள் கெண்டுகொண்டதை அடுத்து   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுதர்சன பத்திரன  அவர்களிடம்   விமானப்படையின்  70 வது  வருட  நிறைவை முன்னிட்டு  இந்த  திட்டத்தை  செய்து முடிக்கும்படி பொறுப்பளித்தார்.
பிரதேச செயலாளரின் முன்மொழிவின் அடிப்படையில், கனகஹவேவா கிராமத்தை இலங்கை விமானப்படையுடன் இணைந்து ஒரு மாதிரி கிராமமாக உருவாக்க நகர அபிவிருத்தி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த முழு திட்டமும் விமானப்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படுகிறது, அவர் விமானப்படை   தரைவழி செயற்ப்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் அவர்களின்  தலைமையில் கீழ் ஒரு வழிநடத்தல் குழுவை நியமித்தார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக  எயார்  கமடோர் உதுல  விஜேசிங்க, சிவில் பொறியியல் பணிப்பகத்தின் மூத்த பணியாளர் அதிகாரி மற்றும் வவுனியா விமானப்படை தள  கட்டளை அதிகாரி , எயார் கமடோர் தேசபிரிய சில்வா. ஆகியோர் உள்ளனர் .

இதன்போது கனுகஹாவெவ  கிராமத்தில்  உள்ளவர்களின் தேவைகளின் அடிப்படையில், கனுகஹாவெவ  அபினவராம விஹாரை  கனுகஹாவெவ  வித்தியாலளயம் ,ஆகியவற்றை  புதுப்பித்தல் மற்றும் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட முடியாதவர்களுக்கு வீடுகள் மற்றும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் என்பன  இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் 314 குடும்பங்களும் அதில் 942 பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இந்த மாதிரி கிராமத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின்ஆரம்பிக்கும் வகையில் இலங்கை  விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களால்  கடந்த  2021 ஜனவரி 28 ம் திகதி  கனுகஹவேவா ஆரம்ப பாடசாலைக்கான ஆசிரியர் விடுதி மற்றும்  கனுகஹவேவா அபினவராம விஹாரைக்கான மணிக்கோபுர நிர்மாணம் . மற்றும் முதல் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும்  வைபவம் இடம்பெற்றன.

மேலும்  விமானப்படை தளபதி அவர்களினால்  அக்கிரம வாசிகளுக்காக  காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக   இருக்க 13 கி.மீ நீளமுள்ள மின்சார வேலி அமைப்பு  அமைக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டன இந்த வேலைத்திட்டத்திற்கான சகல ஏற்பாடுகளையும்  மொரவெவ  விமானப்படை  கட்டளை அதிகாரி  குருப்  கேப்டன் ஹியுமால் தர்மதாஸ அவர்கள் மேற்கொண்டார்

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.