நாட்டின் சௌபாக்கியத்திற்காக இலங்கை சுத்தத்திர சதுக்கத்தில் தொடர் 03 வார பிரித் நிகழ்வு


நாட்டின் சௌபாக்கியத்திற்காக  இலங்கை சுத்தத்திர சதுக்கத்தில் தொடர் 03 வார பிரித்  நிகழ்வின் இறுதி வாரம்  இலங்கை விமானப்படையின் அனுசரணையில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக 03 வாரங்களாக  பகல்  இரவு  பிரித்   நிகழ்வது  கடந்த 2020 நவம்பர்  18 தொடக்கம்  2020 டிசம்பர் 09 வரை  இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைப்படி  பாதுகாப்பு அமைச்சரகம், முப்படை மற்றும் போலீஸ் ஆகிய படைப்பிரிவினரின் பங்களிப்பில் இடப்பெற்றது.

இந்த நிகழ்வின் பௌத்தாலோக்க மாவத்தையில்  உள்ள ஸ்ரீ கல்யாணி யோகாஷ்ர்மா பௌத்த  விஹாரையின் தலைமை விஹாராதிபதி  சங்கைக்குரிய  பஹல விடியல ஜனனந்தபிதன  தேரர் அவர்களின் தலைமையில்  பூஜைவழிபாடுகள்  இடம்பெற்றன.
இதன் இறுதி வாரம் விமானப்படையின் அனுசரணையில்  இடம்பெற்ற பூஜை  வழிபாடுகளில்  காலைநேரம்  , கிரியாகார பூஜையும் பகல் நேரத்தில் புத்த பூஜை வழிபாடும் இரவு நேரத்தில்  கிளன்பச பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றுசூழல் அமைச்சர்  கௌரவ  மஹிந்த அமரவீர , மற்றும் சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திஸ்ஸநாயக மற்றும் விமானப்படை தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பளார் மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்..

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.