22 வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கொழும்பு விமானப்படை தளத்தில் ஆரம்பம்.

22 வது  விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகள் கடத்த  2021 மார்ச் 07 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க   இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 70 வது  வருட நிறைவை முன்னிட்டு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது இந்த போட்டிகள் ஆரம்பிக்கட்ட பின்னர்  பிரதம அதிதியாக வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் விமானப்படை தளபதியை சந்தித்தார் இதன்போது  வரலாற்று குறிப்பு புத்தகத்திலும் கையெப்பம் இட்டார்

இதன்போது  விமானப்படையை  சேர்ந்த எயார் கொமடோர் பத்மன் கொஸ்தா அவர்கள் எழுதிய  "புகழ்பெற்ற விளையாட்டு வரலாறு " எனும் புத்தகத்தின் முதல் பிரதியும்  நினைவுச்சின்னமும்  விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இடம்பெற்றன ஆண்கள் பிரிவு போட்டிகள் கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  ஆரம்பிக்கப்பட்டது  மகளிர் போட்டிகள்  ஏக்கல விமானபடைத்தளத்தில்  ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போட்டிகளுக்கு அனுசரணையாளர்களாக எஸ் எல் டீ மொபிடெல் மற்றும் பீபிள்ஸ் இன்சூரன்ஸ் ஆகியன நிறுவனமும்  ஊடக அனுசரணையாளராக   சேனல் ஐ  மற்றும் நெத் எப் எம் ஆகியன வழங்கின.

இந்த நிகழ்வுகள்  விமானப்படை சைக்கிள் ஓட்டப்பந்தய அணியின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் பாயோ மாற்று  அதன் எயார் கொமடோர் லீலாரத்தன  செயலாளர் அவர்களும் ஏற்பாடுசெய்து இருந்தனர்  இந்த நிகழ்வுகளில்  பரிசளிப்பு வைபவம் கட்டுநாயக்க ஈகிள் லகூன்  மண்டபத்தில்  இடம்பெறும். 

Men's Race

Women's Race

The Hon. Minister of Youth and Sports, Namal Rajapaksa  called on the Commander

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.