2021 ம் ஆண்டுக்கான விமானப்படையின் 22 வது சைக்கிள் ஓட்டப்போட்டிகள் வெற்றிகரமாக நிறைவுக்குவந்தது.

2021 ம் ஆண்டுக்கான விமானப்படையின் 22  வது  சைக்கிள் ஓட்டப்போட்டிகள்  கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  நிறைவுக்குவந்தது  இந்த போட்டிகள் 2021 மார்ச் 07 ம் திகதி இலங்கை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில்  இலங்கை துறைமுக அதிகார சபையின் வீரரான  சொனாள்  தி சில்வா அவர்கள்  வெற்றிபெற்றார்  முறியே 02 ம் 03ம் இடம்களில்    இலங்கை துறைமுக அதிகார சபையின் வீரரான சமுத் தி சில்வா மற்றும்  இலங்கை கடற்படையை சேர்ந்த பிரபாத் மதுசங்க ஆகியோர் வெற்றிபெற்றனர் .

மகளிர் பிரிவில் இலங்கை இராணுவப்படையை சேர்ந்த உதேசினி நிரஞ்சனி வெற்றிபெற்றார்  முறையே  02 ம் 03ம் இடம்களில் இலங்கை விமனப்படையை சேர்ந்த  பாஞ்சாலி சுலோச்சனா , தினேஷா தில்ருக்ஷி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கட்டுநாயக்க  ஈகிள் லகூன் மண்டபத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில்  வழங்கிவைப்பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை சைக்கிள் ஓட்டப்பந்தய அணியின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் பாயோ மாற்று  அதன் செயலாளர் எயார் கொமடோர் லீலாரத்தன மற்றும்  விமானப்படை பணிப்பளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .


Men's Race

Women's Race

Awards Ceremony

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.