இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட வான் சாகச நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

இலங்கை  விமானப்படையின் 70 வது  வருட நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட வான் சாகச  நிகழ்வுகள்  கடந்த 2021 மார்ச் 03 ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நிறைவுக்கு வந்தது இந்த இறுதி நிகழ்வில் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் பிரதமர்  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

சுகாதார வழிமுறைக்கு அமைய  இந்த நிகழ்வுகள் பொதுமக்களின் பார்வைக்காக  காட்சிப்படுத்தப்பட்டது.   

வழமைபோல் முந்தைய இரண்டு நாட்களைப் போலவே, இலங்கை விமானப்படை விமானங்களின் சாகசங்கள் தொடங்கியது   இதில் பெல் 212, பெல் 412 ஹெலிகாப்டர்கள், எம் ஐ  -17 ஹெலிகாப்டர்கள்,  செஸ்னா 150 விமானம்,  பி 200 பீச் கிங் விமானம்,  எம் ஏ -60  விமானம் அத்தோடு  சூப்பர்சோனிக் எஃப் -7 கள் விமானங்கள் மூலம் இடம்பெற்றன அதன்பிறகு இந்திய விமானங்களின் சாகசங்கள்  ஆரம்பிக்கப்பட்டது  பொதுமக்களை பிரமிக்கவைக்கும் வகையில் இந்த நிகழ்வுகள்  இடம்பெற்று முடிந்தது.


Day 2 Images

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.