விமானப்படை சேவா வனிதா பிரிவினால் அனுராதபுர கெப்பித்திகொள்ளவா கனுகஹாவேவ பிரதேசத்தில் மருத்துவ முகாம் வைபவம்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை சேவா வனிதா பிரிவினால் இலங்கை இராணுவ மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து அனுராதபுர  கெப்பித்திகொள்ளவா கனுகஹாவேவ  பிரதேசத்தில் கடந்த 2021 பெப்ரவரி  20 ம்  திகதி  விமானப்படை மருத்துவக்குழுவுடன்  கடற்படை இராணுவப்படை மருத்துவக்குழுவினர் இந்த  நிகழ்வுகள் இடம்பெற்றன .

இதன்போது காண்பரிசோதனை இடம்பெற்றது அதில் 500 பேருக்கும் கண்ணாடியும்  சில கண்நோயாளிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு  மிகவிரைவில்   அறுவை சிகிச்சை அளிக்கப்படவும்  உள்ளன  மேலும் வாய்ப்புற்று நோய் நோயாளிகளை அடையாளம் காண  பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டதுடன்  " சுவ நாரி " பெண்கள் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மேலும் இராணுவத்தினரால் நடமாடும்  கதிர்படம்  எடுக்கும் பணியும் கடற்படையினால் நடமாடும் பல்சிகிச்சையும்  வழங்கப்பட்டது. மேலும் அனுராதபுரத்தின் பிராந்திய  சுகாதார பணிப்பாளர் சேவைகள் மூலம்  நடமாடும்  மருந்தகத்தையும் வழங்கியது, இதன்போது   தேவையான  மருத்துவ பொருட்களை இலவசமாக வழங்கபப்ட்டது .

இந்த நிகழ்வில்  விமானப்படை சுகாதார பணிப்பளார் மற்றும் முப்படை வைத்திய அதிகாரிகள்  அனுராதபுர விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அனுராதபுர சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொணடனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.