வானின் பாதுகாவலர்களான இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிகழ்வுகள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

1951ம் ஆண்டு மார்ச் 02ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட  இலங்கை விமானப்படையானது  தனது 70 வது  வருட நிறைவை  கடந்த 2021 மார்ச் 02 ம் திகதி வெகுவிமர்சையாக    கொண்டாடியது .

70 வது  வருட  நிறைவு  அணிவகுப்பு  நிகழ்வுகள் கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவரக்ளினால் பரீட்சிக்கப்பட்டது . இதனை முன்னிட்டு 467 விமானப்படை அதிகாரிகளுக்கும் 7290 படைவீரர்களுக்கும்  பதவி நிலை உயர்வு அளிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்பு நிகழ்வை எயார் கொமடோர் துஷார வீரரத்ன அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினார் இந்த அணிவகுப்பில்  முறையே 1, 2 மற்றும் 3 வது படைகளை  விங் கமாண்டர் ஜெயரத்ன அமரசிங்க, விங் கமாண்டர் டிலான் கார்டன் மற்றும் விங் கமாண்டர் சமில ஹிரிப்பிட்டிய  ஆகியோர் கட்டளையிட்டனர்.


SLAF 70th Anniversary Theme Song

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.