விமானப்படை ரெஜிமென்ட் கடேட் அதிகாரிகள் இராணுவ கடேட் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி.

விமானப்படை  ரெஜிமென்ட் கடேட் அதிகாரிகள்  இராணுவ கடேட் அதிகாரிகளுடன் இணைந்து   ஸ்கொப்பியன் கூட்டுப்பயிற்சி ஒன்றை 21 ஆண்டுகளுக்கு பிறகு  மேற்கொண்டனர்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  ஆலோசனையின் கீழ் இடம்பெற்றன.

இந்த பயிற்சிநெறியின் ஒரு பகுதியாக வெல்லவாயா  பிரதேசத்தில் கடந்த 15 மார்ச் 21 முதல் 27 மார்ச் 2021 வரை  இடம்பெற்றது இலங்கை  இராணுவ கடேட் -அதிகாரி மற்றும்  விமானப்படை ரெஜிமென்ட்   பிரிவின் கடேட் அதிகாரிகளும் இந்த கூட்டுப்பயிற்சியினை மேற்கொண்டனர்.

விமானப்படை அதிகாரிகளுக்கு உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளவதற்காக  கூட்டு சூழல் மற்றும் பல்வேறு தந்திரோபாய சூழல்கள், என்பவற்றை கையாளும் வகையில் இந்த பயிற்சிநெறிகள்  மேற்கொள்ளப்பட்டன இதனோடு இராணுவத்துடன் இணைத்து சகோதரத்துவத்துடன் செயற்படக்கூடிய வாய்ப்புக்களும் கிடைக்கப்பெற்ட்டன

இந்த பயிற்சிநெறிகள்  தியத்தலாவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாடோ அவர்களின்  வழிகாட்டலிக்கீழ் கேடட் அதிகாரிகளுக்கான தலைமை பயிற்றுவிப்பாளர்  விங் கமாண்டர் மேதவத்த  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.