ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல 61 படைப்பிரிவின் 09 வது வருட நிறைவுதினம்

இந்த படைப்பிரிவானது 2013 மே 06 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது இந்த படைப்பிரிவினால் VVIP/VIP மற்றும் பயணிகள் போக்குவரத்து, துருப்புக்களுக்கான விமான போக்குவரத்து, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், தீயை அணைத்தல், ஸ்லங் நடவடிக்கைகளின் கீழ், விபத்துகளை வெளியேற்றுதல், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறது  விமானப்படை தலைமையகத்தின் கட்டளைக்கு இணங்க பணிகளை செய்துவருகின்றது

ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அசங்க ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த 2022 மே 04 ம் திகதி ரத்மலானை விமானப்படை தளத்தில்  இரத்த தான நிகழ்வு  ஒன்று நடத்தப்பட்டது. மேலும் அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.