வருடாந்த விமான பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு.

விமானப்படை விமான பாதுகாப்பு  பரிசோதனை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பூசண குணதிலக  அவர்களின் ஏற்பட்டின்கீழ் கடந்த 2022 ஜூன் 08 ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் வருடாந்த விமான பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்  வழங்கும்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முதல் 03  வெற்றியாளர்க்ளுக்கும் பரிசில்களை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வுகள்   தொடர்ந்தும் 13 வது  வருடமாக  இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில்  261 சுவரொட்டிகள்  இடம்பெற்றது   நடுவர்கள் அடங்கிய நிபுணர் குழு அவற்றில் 13 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக .விமானப்படை  தலைமைத் தளபதி, ஏயார்  வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களினால் இறுதி முதல் 3 வெற்றியாளர்கள்  தேர்வுசெய்யப்பட்டனர்.

இதில் முதல் 3 இடம்களை  முறையே  பிளைட் சார்ஜன் திலக மாற்றும்  வாரண்ட் அதிகாரி குணவர்தன , கோப்ரல் திஸாநாயக்க ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்  மேலும் 10 வெற்றியாளர்க்ளுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.