அம்பாறை பரசூட் பயிற்ச்சி பாடசாலையின் 20 வது வருட நிறைவுதினம்

இலங்கை விமானப்படை விசேட அதிரடிப்படையின் தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டலின் கீழ் அதிகாரிகள், விமானப்படையினர்/விமானப் பெண்கள் ஆகியோருக்கு அடிப்படை மற்றும் அதிநவீன பாராசூட் பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன்  பரசூட்  பயிற்சிப்பாடசாலை கடந்த 20012 ஜூலை 15ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது  

புதிய தந்திரோபாய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் பகுதிகளை மேம்படுத்தும் வகையில், பரசூட் பயிற்சி பாடசாலை  10 மே 2013 அன்று அம்பாறை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த தினத்தில்  பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விஜித கோமஸ் அவர்கள் அனைவருக்கும் மத்தியில் உறைநிகழ்தினார்  மேலும் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 14 ஜூலை 2022 அன்று, உஹன 'சரண' பள்ளியில் தொண்டு இயக்கம் மற்றும் தொண்டு நன்கொடை ஏற்பாடு செய்யப்பட்டது 2022 ஜூலை 15,  அன்று, அம்பாறை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து தேசிய இரத்த தான முகாம் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளும்  இடம்பெற்றது இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்கள் கலந்துகொண்டார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.