முதன்முதலாக விமானப்படையினால் மகளிர் வான் சாரணியர்களுக்கான இலச்சினை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது

 இலங்கை விமானப்படை ஆனது இலங்கை வான் சாரணியர்களின் முன்னோடியாக திகழ்கின்றது. 57வது கொழும்பு  விமானப்படைவான் சாரணியர் குழு ஆனது முதன் முதலாக 1972 ஆம் ஆண்டு அப்போது விமானப்படை தளபதியாக இருந்த எயார் சீப் மார்ஷல்  பேடி மெண்டிஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது .

 இலங்கை விமானப்படை வான் சாரணியர் குழுவானது  கடந்த 2022 ஆகஸ்ட்  06ம் திகதி  பொன்விழா காண்கின்றது இதன் போது விசேடமாக  புதிய வான் சாரணியர்களுக்கான இலச்சினை வழங்கும் வைபோகமும் இடம்பெற்றது  08 மகளிர் வான் சாரணியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் அவர்களுக்கான இலச்சினை வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வுகள் குவன் புற வான் சாரணியர் பயிற்சி மையத்தில் இடம் பெற்றது

 இந்த நிகழ்வுகள் இலங்கை விமானப்படை  வான் சாரணியர் குழுவின் தலைவர் குரூப் கேப்டன் ஜெயவர்த்தன  அவர்களின் வழிகாட்டல் மற்றும் தலைமையில் இடம்பெற்றது மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை வான்சாரணியக் குழுவின் பிரதி தலைவர் குரூப் கேப்டன்  பொன்னம்பெரும   மற்றும் தேசிய வான் சாரணியக் குழுவின் அங்கத்தவர்கள் ஏனைய விமானப்படை வான் சாரணிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.