சேவா வனிதா பிரிவின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம்

சேவா வனிதா பிரிவின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம்  விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது  கடந்த 2022 ஆகஸ்ட் 26 ம்  திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் தலைமையில் சேவா வனிதா முகாமைத்துவ சபையின் அதன் உறுப்பினர்களின்  மனைவிகள், தலைவர்கள் மற்றும் விமானப்படை  கல்விப்பீடம் , மற்றும் பிரதானபடை தளங்கள் மற்றும் நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்

விமானப்படை சேவா வனிதா பிரிவு கீதம் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன வரவேற்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களால் முன்னைய பொது கூட்டத்தின்  நிமிட வாசிப்பு இடம்பெற்றது.  அதன் பின்னர்,  சேவா வனிதா பிரிவின்  பொருளாளர் ஸ்கொற்றன் ளீடர்  சஹான் கமகே 2019 முதல் 2021 வரையிலான நிதி அறிக்கையிணை  வாசித்தார், மேலும், 2020 ஆம் ஆண்டு வரை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நடத்தப்பட்ட சமூக சேவை பொறுப்புகளின் சுருக்கம் வீடியோ காட்சிகள்  அனைவரும்  அறியும்படி காண்பிக்கப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.