கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சிய சபையின் 71 வது வருட நிரைவுதினம்

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சிய சபை  1951 ஆம் ஆண்டு முதல் 71 வருடங்களாக நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.

பிளைட் லெப்டினன்ட் சிக்னல் தலைமையில் ராயல் சிலோன் விமானப்படையால் 1951 செப்டம்பர் 04 அன்று இந்த சபை  நிறுவப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ரோயல் சிலோன் விமானப்படை இலங்கை விமானப்படையாக மாறிய பின்னர், இந்த டிப்போ விங் கமாண்டர் வி.டி.ஏ.தசநாயக்கவால் கட்டளையிடப்பட்டு இதுவரை 29 கட்டளை அதிகாரிகள்  கட்டளையிட்டுள்ளார்கள்  எயார் கொமடோர் சமன் உடகும்புர தற்போது கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள   இல 01 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சிய சபைக்கு கட்டளையிடுகிறார்.

இந்த சபையின்  71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சம்பிரதாய காலை  அணிவகுப்பு பரீட்சனை  கடந்த (04 செப்டம்பர் 2022) சபையின்  அணிவகுப்பு மைதானத்தில் ஆரம்பமானது, இதன்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமன் உடகும்புர அவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அதன்பின்பு  கட்டளை அதிகாரியனால் உரைநிகழ்த்தப்பட்டது அதனைத்தொடர்ந்து  அனைவரின் பங்கேற்பில்  இப்படைப்பிரிவின்  யுத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மதவழிபாடுகள் இடம்பெற்றன . இறுதியாக அனைவரின் பங்கேற்பில்  விளையாட்டு நிகழ்வுகளோடு  நிறைவுக்கு வந்தது இதன் பிரதம அதிதியாக விநியோக பணிப்பாளர் எயார் கொமடோர் நிஷாந்த திலகசிங்க கலந்துகொண்டு சிறப்பித்தார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.