ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் 28 வது வருட நிறைவுதினம்

1994 ஆம் ஆண்டு தொடக்கம் தேசத்திற்காக மகத்தான சேவையை ஆற்றி வரும்  ஹிங்குராக்கோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07ம் படை பிரிவானது 28 வது வருடத்தை   கடந்த 2022 செப்டம்பர் 23ஆம் திகதி கொண்டாடியது

ஆரம்ப காலகட்டத்தில் பெல் 212 மற்றும் பெல் 206 ஹெலிகாப்டர்கள் மூலம் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி இல 401 ம் படை பிரிவாக  ஆரம்பிக்கப்பட்டு 1996 மார்ச் 23ஆம் திகதி இல 7 ம் படை பிரிவாக உருவானது

இந்த நினைவு தினத்தினை முன்னிட்டு வளமை போல் காலை அணிவகுப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயரத்ண அவர்களால் பரீட்சிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சினேகா பூர்வ ஒன்று கூடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக ஹிங்குராக்கோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சேனைக குளத்துங்க அவர்கள் பங்கேற்றார்

அதனை தொடர்ந்து மேலும் மத வழிபாடுகள் மற்றும் சிரமதான பணிகள் சமூக சேவை திட்டங்கள் என்பன படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
மேலும் அப்படை பிரிவில் கடமையாற்றி  உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில் போதி பூஜை வழிபாடு சடங்குகளும் நடத்தப்பட்டது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.