தியத்தலாவ விமானப்படை தளத்தின் 70 வருட நிறைவுதினம்

தியத்தலாவ  விமானப்படை தளத்தின் 70 வருட நிறைவுதினம் கடந்த 2022 அக்டோபர்  15 ம் திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சேனாதீர அவர்களின் வழிகாட்டலின்கீழ் சமூக சேவைத்திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்  , சமய வழிபாட்டு நிகழ்வுகளுடன் இடம்பெற்றது

அன்றய தினம் கட்டளை அதிகாரியினால் அனைவரின் பங்களிப்பில்  காலை  அணிவகுப்பு   இடம்பெற்றது  இதன்போது உரையாற்றிய கட்டளை அதிகாரி அவர்கள்   அந்த படைத்தளத்தின்  வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் மேலும் 7 தசாப்த காலத்தில் இந்த படைத்தளத்தின்  வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளையும்  குறிப்பிட்டார்

தியத்தலாவ   நகரப்பகுதிகள்  ,  தேசிய வைத்தியசாலை மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் என்பவற்றில் பொது சிரமதான பணிகளும் மேலும் கும்பல்வெல தோவாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சிறப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாம் மற்றும் உலர் உணவுகள் மற்றும் சுகாதார பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டது.

தியத்தலாவை ரோமன் கத்தோலிக்க தேவாலயம், இந்து கோவில் தியத்தலாவ மற்றும் கஹாகொல்ல  அல் -பதுரியா  ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் தொடர்ச்சியான  போதி பூஜை, ஆசீர்வாத வழிபாடுகளை நடாத்துவதன் மூலம் படைத்தளத்திற்கு மத ஆசிர்வாதம்கள் பெறப்பட்டன


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.