2022 ம் ஆண்டு திறன்பட விளையாடிய இங்கை விமானப்படை விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

2022 ம் ஆண்டு திறன்பட விளையாடிய இங்கை விமானப்படை விளையாட்டு வீரர்களுகளை  பாராட்டி  கௌரவிக்கும் வைபவம் கடந்த 222 அக்டோபர் 31 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில்  பாதுகாப்பு சேவை விளையாட்டு தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது

இவ்விழாவின் போது பேஸ்பால், ஹாக்கி மற்றும் ரக்பி ஆகிய பிரிவுகளில் திறன்பட செயற்பட்ட  விமானப்படை  விளையாட்டு வீரர்கள் பாராட்டப்பட்டனர். இந்த விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இதேவேளை  தேசிய மற்றும் சர்வ்தேச அளவில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இலங்கை விமானப்படை விளையாட்டு கவுன்சில் தலைவரினால் வெகுமதிகள்  வழங்கிவைக்கப்பட்டது

மேலும் இதேவேளை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த விமானப்படை வீராங்கனைகள் இருவருக்கு பதவியுயர்வும் வழங்கப்பட்டது

மேலும் விமானப்படை  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும்  விமானப்படை தளபதி தனது பாராட்டுகளை தெரிவித்தார் இந்த நிகழ்வில்  விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.