இல 71கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறியின் நிறைவு வைபவம்


இல 71  கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறியின் நிறைவு வைபவம் கடந்த 2022 டிசம்பர் 06 ம் திகதி  சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  விமானப்படை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஏ.எஸ்.விதான அவர்கள் கலந்துகொண்டார்  

இந்த பயிற்சிநெறியை 30  அதிகாரிகள் 14 வாரங்கள் மேற்கொண்டுள்ளனர் அவர்களுல்  29 இலங்கை விமானப்படை  ஸ்கொற்றன் ளீடர்  மற்றும் பிளைட் லேப்ட்டினால்  ஆகிய நிலை அதிகாரிகளும் ஒரு கடற்படை அதிகாரியும்  இந்த பயிற்சிநெறியில் இணைந்துகொண்டனர்  
இந்த பயிற்சிநெறிக்கு   சார் ஜான் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் இந்த பயிற்சிநெறியை நிறைவுசெய்தவர்களுக்கு பாதுகாப்பு மேலாண்மை பிரிவின் முதுகலை டிப்ளோமா  பட்டமும் வழங்கப்படும்

இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்லூரியின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமன் தசநாயக்க அவர்கள் பேசுகையில் தாம்  பெற்ற அறிவை விமானப்படை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு ஒருமைப்பாடு முக்கியமானது என்பதையும் வலியுறுத்தினார்.  



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.