நத்தார் தீனத்தை முன்னிட்டு சேவா வனிதா பிரிவினால் கட்டுகுருந்த ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் விசேட நிகழ்வு

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையில்  விசேட நன்கொடை திட்டம் கடந்த 2023 டிசம்பர் 23 ம் திகதி  கட்டுகுருந்த ரோமன் கத்தோலிக்க பாடசாலையில்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது  கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஐம்பது (50) பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, கட்டுகுருந்த விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவர் திருமதி ஜெயமினி பிரியங்கிகா குமாரசிங்க, கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் அசித்த ஹெட்டியாராச்சி,விமானப்படை சேவை வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, கட்டுகுருந்த விமானப்படை தள அதிகாரிகள் உட்பட விமானப்படை சேவை வனிதா பிரிவு ஊழியர்கள் மற்றும் ஏனைய அணிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.