இலங்கை விமானப்படையின் இல 10 கஃபீர் ஜெட் தாக்குதல் படைப்பிரிவின் 27 வது வருடநிறைவுதினம்

கட்டுநாயக்க  விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள   விமானப்படையின்  இல 10 ம்  தாக்குதல் கஃபீர்  படைப்பிரிவின் 27 வருட நிறைவுதினம்  கடந்த 2023  ஜனவரி 05 ம்  திகதி கொண்டாடியது

இதன்  நிகழ்வுகள்  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  விஜயகோன்  அவர்களின் தலைமையில்  இடம்பெற்றன  இதன்போது   காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் படைத்தள வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது கட்டளை அதிகாரி அவர்கள்  ஆரம்ப உரை நிகழ்த்தினார்  இதன்போது அவர் இப்படைப்பிரிவினால்  27 வருட காலம்  எமது தாய்நாட்ற்கு  மகத்தான சேவைகள்  அளிப்பட்டதை  நினைவுகூர்ந்தார்.

இதனை தொடர்ந்து  மேலும்  கட்டுநாயக்க  படைத்தள  விகாரையில் யுத்தத்தின் போது  உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில்   பூஜைவழிப்பாடுகளும்  இடம்பெற்றன.

1997 ம் ஆண்டு  ஜனவரி 05 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்படைப்பிரிவானது  ஸ்கொற்றன் ளீடர்   குணசிங்க அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டது அவர் குருப்  கேப்டன்  நிலையில் அவர் ஓய்வுபெற்றார்

தற்போதைய  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் இப்படைப்பிரிவின்  இரண்டாவது கட்டளைஅதிகாரியாக  கடமையாற்றினார் மேலும்  இப்படை  பிரிவை அப்போதைய பிளைட் லேப்ட்டினால்  பீரிஸ் அவர்கள்  நிர்வாக அதிகாரியாக செயற்பட்டார்

இப்படைப்பிரிவானது  எமது தாய்நாட்டிற்காக  மகத்தான சேவையையாற்றியுள்ளது எல் டீ டீ ஈ  பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தனது அதியுயர் பங்களிப்பினை  வழங்கியுள்ளது  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.