இராணுவ கடற்கரைப் கரப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெறவுள்ள வெளிநாட்டு வீரர்கள் இலங்கை விஜயம்

நான்காவது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்குபெற பிரான்ச் ஜெர்மனி நெதர்லாந்து ஓமான் சவுதி அரேபியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி  65 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2023 பெப்ரவரி 11 ஆம் திகதி வந்தடைந்தனர்

இந்த போட்டிகளின் ஆரம்ப விழா 2023 பெப்ரவரி 12ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது மேலும் இந்த போட்டிகள் நீர்கொழும்பு கடற்கரையில் 13ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது

மேலும் இந்த ஆண்டு நான்காவது உலகை இராணுவ கடற்கரை கரப்பந்து போட்டிகளை நடத்தும் உரிமம் இலங்கைக்கு கிடைக்கப்பட்டுள்ளது இதன் இறுதி நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி கோல்டி சண்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்பாக நடைபெற உள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.