04வது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சம்பிரதாயம் முறைப்படி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பமாகியது

04வது உலக இராணுவ கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூட வளாகத்தில் 2023 பிப்ரவரி 12ஆம் திகதி  சம்பிரதாய முறைப்படி இலங்கை விமான படையின் பிரதி தலைமை தளபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

உலகளாவிய ரீதியில் நடைபெற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் நான்காவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச மன்றத்தில் போட்டியிட்ட பல அனுபவமிக்க வீரர்கள் பங்கு பெற உள்ளனர்

இந்த கடற்கரை கடப்பது போட்டிகள் 13ஆம் திகதி  நீர்கொழும்பு கடற்கரையில் ஆரம்பமாக உள்ளன  இந்த போட்டியில் 7 நாடுகளை பிரதித்துவப்படுத்தி  ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கு பெற உள்ளனர்

இந்த ஆரம்ப நிகழ்வில் இந்த நிகழ்வுகள்  ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த் திலகசிங்க மற்றும் கட்டநாயக விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் உலக இராணுவ விளையாட்டு குழுவின்  பொதுச் செயலாளரான இத்தாலிய கடற்படை கேப்டன் ரோபோட்டோ ரெச்சியா மற்றும் விமானப்படை விளையாட்டு குழு அதிகாரிகள் மற்றும் பங்குத்தவர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.