2023 ம் ஆண்டுக்கான விமானப்படை சைக்கிள் சவாரி தொடர்பான ஊடக சந்திப்பு

 2023 ஆம் ஆண்டுக்கான விமானப்படை சைக்கிள் சவாரி பற்றிய செய்தியாளர் சந்திப்பு கடந்து 2023 பெப்ரவரி 22ஆம்திகதி  விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது

இலங்கை விமானப்படையின்  72 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி தொடர்ந்தும் 24வது முறையாக இந்த சைக்கிள் ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்படுகின்றது  இந்த போட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் 30க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியாளர்களும் பங்கு பெற்ற உள்ளனர் விமானப்படையின் சைக்கிள் ஓட்ட போட்டியானது இலங்கை சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வின் நாட்காட்டியின் முக்கியமான ஒரு அங்கமாகும்

ஆண்களுக்கான போட்டியின் காலம் மூன்று நாட்கள் ஆகும் இது 2023 மார்ச் 2-ஆம் திகதி குழம்பு விமானப்படை தளத்தில் இருந்து ஆரம்பமாகி கண்டி பொலன்னறுவ மற்றும் அனுராதபுரம் வரை  இந்த பயணம் இடம்பெறும் அதேவேளை மார்ச் 4ஆம் திகதி மகளிர்களுக்கான போட்டி  அவர் அணையில் இருந்து அனுராதபுரம்  வரை இடம் பெற உள்ளது

இந்த போட்டியின் இறுதி விருது வழங்கும் விழா அனுராதபுர விமானப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் கலந்து கொண்டு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கி வைப்பார்

இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் லசித்த சுமன வீர அவர்கள் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது இந்த நிகழ்வின் விமான படையின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கேப்டன் துசாந்த் விஜயசிங்க வரவேற்புரை வழங்கினார் மேலும் இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டுதல் சம்மேலனத்தின்  செயலாளர் மற்றும் நிப்பான் பெயிண்ட் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் திரு. நேமந்த அபேசிங்க  மற்றும் அபாண்ட்ஸ் குழும நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு லலிந்ர ப்ராஹ்மண மற்றும் இலத்திரனியில் மற்றும் அச்சு ஊடகங்களை சேர்ந்த ஏராளமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்

இந்த வருடம் இந்த போட்டி தொடரில் அனுசரணையாளர்களாக நிப்பான் பெயிண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் தொலைதொடர்பு பங்குதாரர்களாக எஸ் எல் டி மொபிடல்  ஆகியோர் உள்ளனர் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்குதாரராக பீப்புல்ஸ் லீசிங் இன்சூரன்ஸ் மற்றும் வெடாலஜன் மெலிபன்ட் பிஸ்கட் உற்பத்தியாளர் பிரைவேட் லிமிடெட் உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து பங்குதாரராக உள்ளனர் இந்த போட்டியினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  வானொலி அனுசரணைக்காக நெத் எப் எம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.