விமானப்படை சேவை வனிதா பிரிவு " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் மூலம் வீட்டுத்திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, இறந்த சேவையாளர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் " குவான்மீதுதகம் ''  வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இத்திட்டத்தின் முதலாவது வீடு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரன தலைமையில் அனுராதபுரம் மஹாபலடிக்குளத்தில் கோப்ரல் பண்டார (இறந்த) குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் இத்திட்டம் அனுராதபுரம் விமானப்படை தளத்தினால் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிவில்பொறியியல்  பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்கவின் பணிப்புரையின் பேரில்  அனுராதபுரம் விமானப்படை தளத்தின்   கட்டளை அதிகாரி குரூப் கப்டன் பிரியமல் பெர்னாண்டோவின் மேற்பார்வையின் இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் விமானப்படை அனுராதபுர விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா கமகே, உதவி செயலாளர் சேவா வனிதா பிரிவின் ஸ்கொற்றன் ளீடர் கல்ஹாரி விஜேசிங்க, மற்றும்  அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.