அனுராதபுர ஜய ஸ்ரீ மஹாபோதி விகாரையில் இலங்கை விமானப்படை கொடிகளுக்கான ஆசீர்வாத பூஜை வழிபாடுகள்

விமானப்படையின்   72 வது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்த பாரம்பரிய விமானப்படை கொடிகளுக்கான  ஆசீர்வாத நிகழ்வு புனித அனுராதபுரம் ஜெயஸ்ரீ மஹா போதியில்  2023  மார்ச் 17ம் திகதி  . விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இந்த வழிபாட்டு நிகழ்வில் அனைத்து விமானப்படை தளங்களின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

இதன்போது  அனைத்து விமானப்படை தளங்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும்  விமானப்படை கொடிகளுக்கான ஆசீர்வாத பூஜை வழிபாடுகள் மற்றும்  விமானப்படையில்  பல்வேறு பொறுப்புக்கள் வகிக்கும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்காகவும் இந்த ஆசீர்வாத பூஜை நிகழ்வுகளும்  இடம்பெற்றது

அனுராதபுர விமானப்படை தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.