இலங்கை விமானப்படையின் 52 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் வவுனியாவில் இடம்பெற்றது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் வவுனியா குணானந்த முன்னிலை பாடசாலையில்    விமானப்படை தளத்தின் மூலம்  கட்டுகுருந்த வடக்கு எதனமடன கனிஷ்ட பாடசாலையில்    கடந்த 2023 மார்ச் 18ம்  திகதி   52 வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்    வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இப்பாடசாலையில் ஏறத்தாழ 95 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன், பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த கட்டிடம் ஒன்று புனரமைக்கப்பட்டு, அவர்களின் கல்விக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்காக வண்ணம் துவைக்கப்பட்டுள்ளது.ஆரம்பப் பாடசாலையின் சிறார்களிடம் இந்தக் கட்டிடம் கையளிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களும் இதன்போது அன்பளிப்புச் செய்யப்பட்டன. இந்த திட்டமானது விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் வவுனியா விமானப்படை தளத்தினால் நிதியுதவி செய்யப்பட்டதுடன், வவுனியா விமானப்படை தளத்தின் தளபதி குரூப் கேப்டன்  பூஜன குணதிலக்கவின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை அதிகாரிகள்,படைவீரர்கள் கலந்துகொணடர்   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.