மத்திய விமான பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி மற்றும் ராயல் விமானப்படை அதிகாரிகள் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்

மத்தியவிமான பயிற்சி பாடசாலை கட்டளைத் அதிகாரி  குரூப் கப்டன் டி.எம். ஜோர்டான் தலைமையிலான அரச விமானப் படையின் தூதுக்குழு, 2023 மார்ச் 21 முதல் மார்ச் 23 வரை இலங்கை விமானப்படைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, அறிவுப் பகிர்வு ஆரம்ப அமர்வில் விமானப்படையின் வான் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்கிரமரத்ன கலந்து கொண்டு, ரத்மலானை விமானப்படை தளத்திலும், கட்டுநாயக்கா விமானப்படை தளத்திலும் உள்ள  விமான  தளங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூதுக்குழுவினர்  2023 மார்ச் 23ம்  திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.



SLAF Base Ratmalana

SLAF Base Katunayake

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.