இலங்கை விமானப்படை மகளிர் படைப்பிரிவினால் கடற்க்கரை சுத்தம்செய்தல் நிகழ்வு

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் ஆலோசனைப்படி  இலங்கை விமானப்படை மகளிர் படைப்பிரிவு கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மனோஜ் கெப்படிபோல அவர்கள்  வழிகாட்டலின்கீழ் கடந்த 2023 மார்ச் 24ம்  திகதி கல்கிஸ்ஸ கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள்  இலங்கை விமானப்படை மகளிர் படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

அரைநாள் வேலைத்திட்டமான இந்த நிகழ்வில்  கல்கிஸ்ஸ கடற்கரையில் இருந்து தெஹிவளை கடற்க்கரை வரை சுத்தம்செய்தல் பணிகள் இடம்பெற்றன இந்த நிகழ்விற்கு "வன அரண", "லஸ்ஸன வெரல" மற்றும் "பெப்சி" உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சமூகங்களால் அனுசரணை வழங்கப்ட்டது.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றியமை, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான நடைமுறைகளை நோக்கிய இலங்கை விமானப்படையின் மகளிர் பிரிவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.