இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்தார்

இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த  2023 மே 02ம் திகதி  இலங்கை  சோஷலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்  

இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருவருக்குமிடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

அதனைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. சாகல ரத்நாயக்காவை அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடலின் பின்னர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தைக் குறிக்கும் வகையில் வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு கோபால் பாக்லே அவர்களின் வழிகாட்டலின்  கீழ் இடம்பெற்றதுடன், இந்திய விமானப்படைத் தளபதியுடன் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவும் கலந்துகொண்டார்.


Chief of the Air Staff called on the President

Chief of the Air Staff called on the National Security Advisor

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.