பிரான்சில் இடம்பெறும் 24வது உலக இராணுவ முவ்வகை போட்டியில் பங்குபெறவுள்ள இலங்கை பாதுகாப்பு படை அணியினர் இலங்கையில் இருந்து புறப்பட்டனர்

2023 மே 5 முதல் 2023 மே 9 வரை பிரான்சின் இல் நடைபெறவுள்ள 24வது  உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இலங்கை பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் அணி  2023 மே  04ம் திகதி

 நாட்டை விட்டுப் புறப்பட்டது.  இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின், போர்த்துக்கல் , ஹங்கேரி, பிரேசில், லக்சம்பர்க், சவூதி அரேபியா, ஜெர்மனி, கனடா, பெல்ஜியம், அமெரிக்கா, ஸ்லோவேனியா, போலந்து, சில்லி, ஈக்வேட்டர், கிரீஸ், இலங்கை, நெதர்லாந்து, இந்தியா, லிதுவேனியா மற்றும் குவைத்.  என 22 நாடுகள் பங்கேற்கின்றன.

விமானப்படைத் தளபதியும், பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுச் சபையின் தலைவருமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பங்கேற்பாளர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், விளையாட்டுப் போட்டியின் போது அவர்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்தினார். பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுச் சபையின் செயலாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகே அவர்களும் ஜனாதிபதி பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுச் சபை மற்றும் பாதுகாப்புச் சேவைகள் டிரையத்லான் அணியுடன் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.