இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவினால் இரத்ததான நிகழ்வுகள்

இலங்கை விமானப்படை  ஊடகப்பிரிவினால் 2023 மே 26ம்  திகதி  15 வது வருடத்தை முன்னிட்டு  இரத்ததானம் வழங்கும்  நிகழ்வுகள் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையில் கடந்த 2023 மே 22ம்  திகதி  இடம்பெற்றது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் அனுமதியின் கீழ் விமானப்படை ஊடகப்பணிப்பாளர்  குருப் கேப்டன் துஷான் விஜேசிங்க  அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்படி இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

கடந்த 2008 மே 26 ம் திகதி விமானப்படை தளபதி ஊடகப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு பின்பு விமானப்படை ஊடக பிரிவாக மாற்றம்பெற்று தற்போது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது இந்த இரத்த தான நிகழ்வில் ஊடக பணிப்பாளர் உற்பட அதிகாரிகள் மற்றும் இதர நிலை உத்தியோகத்தரகளும்  பங்குபற்றினர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.