இலங்கை விமானப்படையின் 55வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் கம்பஹாவில் இடம்பெற்றது

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் கட்டுநாயக்க    விமானப்படை தளத்தினால் இலங்கை விமானப்படையின் 55வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம்கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆர்க்லோ அனாதை இல்லத்தில்  கடந்த 2023 மே 26ம் திகதி   வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

ஆர்க்லோ குழந்தைகள் இல்லத்தில் பல்வேறு வயதுடைய சுமார் 26 குழந்தைகள் தங்கியுள்ளனர். அனாதை இல்லத்தின் மேற்கூரையை சீர் செய்தல், கட்டிடத்திற்கு பெயின்ட் அடித்தல், சிமென்ட் தளத்தை புதுப்பித்தல், வகுப்பறை நாற்காலிகள் மற்றும் மேஜைகள் அமைத்தல், கதவுகளை சரி செய்தல், முறையான நீர் மற்றும் மின்சார இணைப்புகளை கண்காணித்தல் மற்றும் புதிய மின்விசிறிகள் பொருத்துதல் போன்ற பணிகள் இடம்பெற்று . கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சமன் உடுகும்புரவினால்  கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விமானப்படை சேவை வனிதா பிரிவு மற்றும் விமானப்படை தளம் கட்டுநாயக்க நிதியளித்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.