இலங்கை விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

இலங்கை விமானப்படையின் 18வது விமானப்படைத் தளபதியான எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன, அவர்கள்  விமானப்படைத் தளபதி பதவியை எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவிடம்  2023 .ஜூன் 29ம் திகதி  விமானப்படைத் தலைமையகத்தில் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

பதவி விலகும் விமானப்படை தளபதிக்கு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஜனாதிபதியின் நிறங்கள் அடங்கிய  கொடிகளுடன் வர்ண  அணிவகுப்பு படைப்பிரிவினால்  அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் பதவி விலகும் தலைவி திருமதி சாமினி பத்திரனவும் கலந்துகொண்டார். அதன் பின்னர், வெளியேறும் விமானப்படைத் தளபதி முழு விமானப்படையினருக்கும் இறுதியுரையை நிகழ்த்தியுடன்  தனது உரையின் போது தனது சேவையின் போது வழங்கிய ஆதரவிற்காக இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

சம்பிரதாய அணிவகுப்பின் பின்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின்  அதிகாரிகளின் வாசஸ்தல வளாகத்தில் பாரம்பரிய விருந்துபசாரம் இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் சுதர்சன் பத்திரன மற்றும் அவரது மனைவி திருமதி சாமினி பத்திரன ஆகியோரின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Ceremonial Parade

Handing over of ceremonial baton

Dining-Out Night

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.