இரணைமடு விமானப்படை தளத்தினால் விசேட சமூகசேவைத்திடம்

இரணைமடு விமானப்படை தளத்தினால் கடந்த 2023 ஜூலை 14ம் திகதி  விசேட  சமூகசேவைத்திடம்  ஓன்று மேற்கொள்ளப்பட்டது அந்தவகையில் படைத்தளத்திற்கு அருகாமையில் வசிக்கும் குறைந்த  வருமானம்கொண்ட  குடும்பங்களுக்கும்,படைத்தளத்துன் தொடர்புடைய சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கும்  ஆதரவை வழங்கும் நோக்கில் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள்  விநியோகம் செய்யப்பட்டது மேலும் இரணைமடு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சுலோச்சனா மாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளிநொச்சி கல்மடுநகர் ஆரம்ப பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை சீருடை விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

ஃபார்ம்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. கிளாரன்ஸ் மென்டிஸ் அவர்களின் தாராளமான அனுசரணையின் மூலம் இந்த முயற்சி சாத்தியமானது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.