விமானப்படை பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் இடைநிலை போட்டிகள்

விமானப்படை தளங்களுக்கிடையிலான பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 27 ஜூலை 2023 அன்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமானப்படை தள உடற்பயிற்சி கூடத்தில் விமானப்படை  நிர்வாக பணிப்பாளர் நாயகம்  எயார் கொமடோர் கே.எம்.கே கேப்பிட்டிபொல அவர்களின் பங்கேற்பில்  இடம்பெற்றது .

இந்த போட்டித்தொடரில் தியத்தலாவ விமானப்படை தளம்  ஒட்டுமொத்த பட்டத்தையும், அனுராதபுரம் விமானப்படை தளம் இரண்டாம் இடத்தையும் பெற்றது. திரு சமன் பண்டார மற்றும் விமானப்படை வீராங்கனை வீரசிங்க ஆகியோர்  ஒற்றையர் பிரிவில்  வெற்றி பெற்றனர்.

இந்நிகழ்வில் பதில் விளையாட்டுப் பணிப்பாளர்,அனுராதபுரம்  விமானப்படைத் தளத்தின் கட்டளைத் அதிகாரி  , தியத்தலாவ விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி ,உற்பட  விமானப்படை விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிதிகள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.