2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

2023 ஆம் ஆண்டிற்கான  விமானப்படை தளங்களிக்கிடையிலான சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் 2023 ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 15 வரை கட்டுகுருந்த விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.இந்த ஆண்டு நிகழ்வுகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட நேர சோதனை மற்றும் சைக்கிள் ஓட்டுதலில் சிறந்த விளையாட்டுப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆண் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில்   நடத்தப்பட்டன.

சாம்பியன்ஷிப்பின் முதன்மை நிகழ்வு, ஆண்களுக்கான பிரிவில் , 15 ஆகஸ்ட் 2023 அன்று அதிக போட்டியாளர்களின்  பங்கேற்புடன்  நடைபெற்றது.இதன்போது பிரதம அதிதியாக விமானப்படை கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும் வானூர்தி பொறியியல் பணிப்பாளர் நாயகமும் எயார் வைஸ் மார்ஷல் ரஞ்சித் சேனாநாயக்க கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் கொழும்பு விமானப்படைத் தளத்கட்டளை அதிகாரியும் விமானப்படையின் கால்பந்தாட்டத் தலைவருமான எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் குரூப் கப்டன் சமந்த வீரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படை கொழும்பு அணி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டிலும் அணி சம்பியன்ஷிப்களை வென்றது, இலங்கை விமானப்படை கட்டுநாயக்க முகாமின் தொழில்நுட்ப அமைப்பு பிரிவு ஆண்களுக்கான இரண்டாம் இடத்தையும், சீனக்குடா  விமானப்படை அகாடமி பெண்கள் இரண்டாம் இடத்தையும் வென்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.