மூலம் அவசர சூழ்நிலையை சிறப்பாக கையாண்டமைக்காக பல்வேறு பாராட்டுகளையும் பெற்றார் இதன் மூலம் மாட்டின் பேக்கர் விமான நிறுவனத்தினால் கௌரவமான அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் அவருடைய சேவை காலத்தில் பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி கல்லூரியில் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சி நெறியையும், பாகிஸ்தானில் விமான பாதுகாப்பு பயிற்சியினையும், ஐக்கிய அமெரிக்காவில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பயிற்சியினையும் நிறைவு செய்த அவர் கல்வித்துறையில்  சர்ஜோன் கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்.

 மேலாண்மையில் பாதுகாப்பு ஆய்வுகளில் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றார் மேலும் அமெரிக்காவில் உள்ள அலபமா வான் பல்கலைக்கழகத்தில் இராணுவ அறிவியல் முதுகலை பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில்  சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய முதுகலை பட்டமும் "இதில் முதன்மை சித்தியும்" பெற்றார். அமெரிக்காவின் புகழ் பெற்ற  அலாபமா விமானப்படை வான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பழைய மாணவரும் psc ஆவார். அவர் ஐக்கிய ராஜ்யத்தின் ராயல் பாதுகாப்புக் கல்வி கல்லூரியில் சிறப்பு சர்வதேச பாதுகாப்பு கல்வி மற்றும் யுக்தி பயிற்சி நெறி இணையும் நிறைவு செய்துள்ளார்.

மேலும் அவருடைய சேவைக்காக மதிப்புமிக்க "ரணசூர பதக்கம்" மூன்று முறை பெற்றார் அத்தோடு" விசிட்ட சேவா விபூஷன ", பதக்கம் உத்தம சேவா "பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களுடைய சேவை காலத்தில் பொறிக்கப்பட்ட நியமனங்களாக  2011 முதல் 2012 வரை ஹிங்குராங்கொட விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக  பொறுப்பேற்றார். 2012 முதல் 2014 வரை ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மதிப்புமிக்க இலங்கை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். ரஷ்யாவில் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக (SASO) நியமிக்கப்பட்டார். அதற்கு பின்னர்  2015 செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல்  வவுனியா விமானப்படை  தளத்த்தின் கட்டளை அதிகாரியாக  நியமிக்கப்பட்டார். மேலும், அவர்  2016 செப்டம்பர் 12 ம்  திகதி முதல்  2017 ஆகஸ்ட் 23ம் திகதி வரையிலும்,  2018  ஆகஸ்ட்  07ம் திகதி  முதல் 2019 ஜூன் 30ம் திகதி  வரையிலும் விமானச் செயலாளராகவும் கடமையாற்றினார்.


எயார்  மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ  அவர்கள் 2020ம் ஆண்டு   சீனக்குடா  விமானப்படை கல்விப்பீடத்தின் அகாடமியின் கட்டளை  அதிகாரியாக  தளபதியாக நியமிக்கப்பட்டார் மேலும்  கிழக்கு வான் கட்டளை தளபதியாகவும்  நியமனம் பெற்றார். பின்னர் அவர்  கட்டுநாயக்க விமானப்படை  தளத்தில் தனது பணிக்காலத்தில் கட்டளை அதிகாரியாகவும் தெற்கு வான் கட்டளை  மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தளபதி ( வான் பாதுகாப்பு ) ஆகிய  பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் விமானப்படை தலைமயக்கத்தில்  வான் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பின்னர் விமானப்படை தலைமை தளபதியாகவும் பணிவகித்தார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் இராணுவ சாதனைக்கு அப்பால் ஒரு விளையாட்டு வீரராக தன்னை பலமுறை நிரூபித்துள்ளார் அந்த வகையில் அவர் டேபிள் டெனிஸ், டெனிஸ் மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர் விமானப்படையின் சிறந்த தடகள வீரராகவும் செயற்பட்டுள்ளார். அவருக்கு விமானப்படை சிறந்த கோல்ப் மற்றும் டெனிஸ்  வீரருக்கான விருதும் கிடைக்கப் பெற்றுள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.