இலங்கை விமானப்படை தளபதிக்கு கம்பஹா பராக்கிரம வித்தியாலயத்தினால் கௌரவிப்பு

இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை கௌரவிக்கும் வைபவம் அவர் ஆரம்பக் கல்வியைப் பெற்ற கம்பஹா பராக்கிரம மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பராக்கிரம மகா வித்தியாலயத்தை வந்தடைந்த விமானப்படைத் தளபதியை பராக்கிரம மஹா  வித்தியாலய அதிபர்  வரவேற்றார், கல்லூரி சாரணர்களின் மரியாதையை தொடர்ந்து கேடட்  மாணவர்களின்  அணிவகுப்பு நிகழ்வும் இடப்பெற்றது நடைபெற்றது.
 
பின்னர் விமானப்படை தளபதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்  இதன்போது பாடசாலைக் காலத்தில் அவர் செயற்பட்ட விதம் குறித்து கல்விச் செயற்பாடுகள் மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளில் பங்களிப்பதன் மூலம் பெற்ற அனுபவங்களினூடாகவே இவ்வாறான வெற்றிகரமான பயணத்தை அடைய முடிந்ததாக தெரிவித்தார் .அனைத்து மாணவர்களும் கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் சாராத நடவடிக்கைகளுக்கு தங்களால் இயன்றதைச் செய்து தங்கள் வாழ்க்கையை வெற்றியடையச் செய்ய மேலும் வலியுறுத்தினார்

இந்த நிகழ்வின்போது  கல்லூரி முதல்வரினால்  விமானப்படை தளபதிக்கு நினைவுச்சின்னம்  வழங்கப்பட்டதுடன்  விமானப்படை தளபதியினால் பாடசாலைக்கு  நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.